சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
இது வெற்றியை நோக்கிய பயணமா? 'தமிழோடு விளையாடு' போட்டியாளர்களுடன் சில வார்த்தைகள்...

மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது 'தமிழோடு விளையாடு' போட்டி!
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் முதல் சுற்று இன்று (25 பிப்ரவரி) St. Gabriel's உயர்நிலை பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
மூவாண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இப்போட்டியில் பங்கெடுக்கும் சில மாணவர்களைச் சந்தித்துப் பேசியது 'செய்தி'.

"நான் இங்கு வெற்றிபெற வரவில்லை. இந்த அனுபவத்துக்காக வந்துள்ளேன்" - ஆர்யா ஜோஷன்

"முதல் அனுபவம்.. முதல் வெற்றியாக இருக்கும் என்று நம்புகிறேன்..." - இஷானிக்கா

"இதற்குமுன் நடைபெற்ற போட்டிகளைக் கண்டு போட்டிக்குத் தயாராகினேன்" - சாய் பிரசன்னா

"போட்டியின் சில அங்கங்கள் கடினமாக இருந்தன. ஆனால் நாம் நிறைய பயிற்சி செய்தோம்... நன்றாகச் செய்வோம் என்ற நம்பிக்கை உண்டு!" - நந்திதா நடராஜன்
போட்டிக்குத் தயார் செய்ய மாணவர்கள் பல நாள்கள், பல முயற்சிகளை மேற்கொண்டனர்..
முதல் சுற்றில் இன்று சுமார் 70 பள்ளிகள் பங்கேற்கின்றன.
மாணவர்களிடையே தமிழில் பிழையின்றி எழுதுவதை ஊக்குவிப்பது, சொல்வளத்தைக் கூட்டுவது, தமிழ் மீதான ஆர்வத்தைப் பெருக்குவது ஆகியவை இப்போட்டியின் இலக்குகள்.