சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 1,300 பேர் காணாமல் போகிறார்கள்
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
சிங்கப்பூரில் ஆண்டுதோறும் சராசரியாக 1,300 பேர் காணாமல் போகிறார்கள்.
அது 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை காணப்பட்ட நிலவரம்.
உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கா. சண்முகம் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபவுஸி (Fadli Fawzi) முன்வைத்த கேள்விகளுக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.
2021ஆம் ஆண்டு முதல் எத்தனைப் பேர் காணாமல் போனதாகப் புகார்கள் எழுந்தன; எத்தனைப் பேர் ஒரு மாதத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று திரு ஃபவுஸி கேட்டார்.
காணாமல் போனவர்களைப் புதிய SG Alert அமைப்பின் வழி கண்டுபிடிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்கிறதா என்றும் அவர் வினவினார்.
ஒவ்வொருவரையும் கண்டுபிடிக்கத் தேவைப்படும் நேரம் மாறுபடலாம்; காவல்துறை அதைக் கண்காணிப்பதில்லை என்று அமைச்சர் சண்முகம் கூறினார்.
இளம் பிள்ளைகள், முதியோர், அறிவுத்திறன் குன்றியோர் போன்று அதிக உதவி தேவைப்படுபவர்களை அதிகாரிகள் முதலில் தேடுவார்கள்.
அவர்களில் பெரும்பாலோர் ஒரு நாளுக்குள் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
SG Alert அமைப்பைப் பொறுத்தவரை அது அவசரகால நெருக்கடிகளைக் கையாளுவதற்கு வடிவமைக்கப்பட்டது.
அதனைத் தேவைக்கு அதிகமாக அடிக்கடி பயன்படுத்தினால் அவசரகால நடவடிக்கைகள் மட்டுப்படலாம் என்றார் அமைச்சர்.

ஆதாரம் : Mediacorp Seithi