விமானம் கடத்தப்பட்டால்... பயங்கரவாத முறியடிப்புக் கூட்டுப் பயிற்சி
படம்: FB/ Singapore Police Force
சிங்கப்பூர்க் காவல்துறையும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் பயங்கரவாத முறியடிப்புக் கூட்டுப் பயிற்சியை நிறைவு செய்துள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சோதிக்க Nexus Resolve எனும் பயிற்சி நடத்தப்பட்டது.
உள்துறை அமைச்சின் சீருடைப் பிரிவு உத்திகள் நிலையத்திலும் சாங்கி விமான நிலையத்திலும் அந்தப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயுதத் தாக்குதல், பிணை பிடிக்கப்படும் சூழல், வெடிகுண்டுகளை அடையாளம் காணுதல், விமானக் கடத்தல் உள்ளிட்ட கடுமையான அச்சுறுத்தல் சூழல்களில் பயிற்சி வழங்கப்பட்டது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, காவல்துறை, ஆயுதப்படை, முக்கிய விமானத்துறைப் பிரிவுகள் ஆகியவற்றின் 1,000க்கும் அதிகமானோர் பயிற்சியில் கலந்துகொண்டனர்.