Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

SQ321 விமானச் சம்பவம்: வானிலை ரேடார் கட்டமைப்பின் பகுதிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன

வாசிப்புநேரம் -
SQ321 விமானச் சம்பவம்: வானிலை ரேடார் கட்டமைப்பின் பகுதிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன

படம்: Reuters/Stringer

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்ற ஆண்டு மே மாதம் ஆட்டங்கண்ட சம்பவத்தின் தொடர்பில் அதன் வானிலை ரேடார் கட்டமைப்பின் பகுதிகள் சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு அதனைத் தெரிவித்தது.

சோதனை முடிந்தபின் இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றது பிரிவு.

சம்பவத்தின்போது SQ-321 விமானம் லண்டனிலிருந்து சிங்கப்பூர் வந்துகொண்டிருந்தது.

மியன்மாரின் தென்பகுதியில் 37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் கடுமையான வானிலை காரணமாக ஆட்டங்கண்டது.

சம்பவத்தில் ஒருவர் மாண்டார்.
79 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

விமானம் பேங்காக்கிற்குத் திருப்பிவிடப்பட்டது.

சிங்கப்பூர்ப் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைப் பிரிவு போக்குவரத்து அமைச்சின்கீழ் இயங்குகிறது.

அதன் விசாரணைக்கு தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆணையம், மத்திய விமானத்துறை நிர்வாகம், போயிங் நிறுவனம் ஆகியவை உதவுகின்றன.

சம்பவத்தில் மாண்டவர் 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஜியோஃப் கிச்சன் (Geoff Kitchen).

அவரது மரணத்துக்கு மாரடைப்பு காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

சம்பவத்தில் லேசான காயம் ஏற்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 10,000 டாலர் (12,866 வெள்ளி) இழப்பீடு வழங்கியது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்