SQ321 விமானச் சம்பவம்: என்ன நடந்தது?
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Athit Perawongmetha
SQ 321 விமானம் நடுவானில் ஆட்டங்கண்ட சம்பவம்.
நிமிடத்துக்கு நிமிடம்... அடுத்தடுத்து என்னென்ன நடந்தன?
விவரங்களை வழங்கியது போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு முழு விசாரணை அறிக்கை.
சிங்கப்பூர் நேரம் பிற்பகல் 3.30 மணி:
விமானம் 37,000 அடி உயரத்தில் மியன்மார் அருகே பறந்தபோது வானிலை தெளிவாக இருந்தது. விமானிகளின் வழிகாட்டித் திரைகளிலும் எந்த வானிலை மாற்றமும் காட்டப்படவில்லை.
பிற்பகல் 3:44 - 3:45:
விமானிகள் வானிலையைக் காரணம் காட்டி மாற்றுப் பாதையைக் கோரிப் பெற்றனர்.
அப்போதும் ஆபத்துக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.
பிற்பகல் 3:49 (அசம்பாவிதம் நிகழ்ந்த தருணம்):
திடீரென விமானம் அதிர்வுகளைச் சந்தித்தது. அனுமதிக்கப்பட்ட வேகத்தைத் தாண்டாமல் இருக்க விமானிகள் வேகத்தைக் குறைத்து இருக்கை வாரைப் போடுமாறு எச்சரித்தனர்.
வெறும் 0.6 வினாடிகளில் புவிஈர்ப்பு விசை தலைகீழாக மாறியதால் இருக்கை வார் அணியாத பயணிகள் விமானத்தின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர்; அடுத்த 4 வினாடிகளில் மீண்டும் கீழே தூக்கியடிக்கப்பட்டனர்.
விமானிகள் 21 வினாடிகளுக்கு 'ஆட்டோபைலட்' வசதியை நிறுத்தி கையால் விமானத்தை நிலைப்படுத்தினர்.
பிற்பகல் 3:51 - 3:55:
வானம் தெளிவாக இருந்ததால், வானிலை ரேடார் அதிகபட்சத் திறனில் இருந்தும் அந்த அதிர்வு திரையில் ஏன் காட்டப்படவில்லை என்று விமானிகள் ஆச்சரியமடைந்தனர்.
அதன் பின்னரே பயணிகள், சிப்பந்திகள் பலருக்குக் காயம் ஏற்பட்ட தகவல் அவர்களுக்குத் தெரியவந்தது.
மாலை 4:01 - 4:06:
விமானிகள் அவசரநிலையை அறிவித்து பேங்காக் நகருக்கு விமானத்தைத் திருப்பிவிட்டனர்.
மாலை 4:45:
விமானம் பேங்காக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

ஆதாரம் : CNA