Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

SQ321 விமானச் சம்பவம்: வானிலை ரேடார் உண்மையான வானிலை நிலவரத்தைக் காட்டத் தவறியிருக்கலாம்

வாசிப்புநேரம் -
SQ321 விமானச் சம்பவம்: வானிலை ரேடார் உண்மையான வானிலை நிலவரத்தைக் காட்டத் தவறியிருக்கலாம்

படம்: Reuters/Handout, Stringer

வெளியீடு : 19 May 2026 06:11PM புதுப்பிப்பு : 19 May 2026 08:17PM
SQ 321 விமானம் நடுவானில் ஆட்டங்கண்ட சம்பவத்தில் வானிலை ரேடார் உண்மையான வானிலை நிலவரத்தைக் காட்டத் தவறியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதம் குறித்துப் போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு முழு விசாரணை அறிக்கையை வெளியிட்டது.

விமானம் செல்லும் பாதை தெளிவாக இருந்ததாகவும் வானிலை ரேடார் எந்த ஆபத்தான வானிலையையும் காட்டவில்லை என்றும் விமானிகள் குறிப்பிட்டனர்.

அவர்கள் சொல்வது நம்பக்கூடியதே என்று புலனாய்வாளர்கள் கூறினர்.

சம்பவம் நடந்த அதே மாதத்தில் அந்த வானிலை ரேடார் 3 முறை வானிலையைக் குறைத்துக் காட்டியதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவத்தைப் பற்றிய விவரங்கள்...

2024ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி லண்டனிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் மியன்மார் வான்வெளியில் மிக மோசமாக ஆட்டங்கண்டது.

ஐந்தே விநாடியில் விமானம் 50 மீட்டர் கீழே இறங்கியது.

அந்தச் சம்பவத்தில் 73 வயது பிரிட்டிஷ் ஆடவர் மாண்டார்.

79 பேர் காயமுற்றனர்.

விமானம் அவசரமாகத் தாய்லந்தில் தரையிறங்கியது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்