Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'சிங்கப்பூரில் உள்ள இலங்கை மக்களுக்கு நிலைமை குறித்து வருத்தமே...'

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் உள்ள இலங்கை மக்கள் இலங்கையின் நிலைமைகுறித்து வருந்துவதாகச் சிங்கப்பூர் சிலோன் தமிழ் அமைப்பின் தலைவர் திரு. மோஹனரூபன் தெரிவித்துள்ளார்.

"சில மாதங்களுக்கு முன்புதான் இலங்கையில் மருந்து வாங்க உதவ நன்கொடை அளித்தோம். அங்குள்ள நிலைமை மோசமானால் உள்ளூர் மக்களிடம் நன்கொடை பெறுவதுகுறித்து ஆலோசித்து வருகிறோம்."

என்று அவர் 'செய்தி'யிடம் கூறினார்.

"உள்நாட்டுப் போரின்போது இதேபோன்ற சூழலைத்தான் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்த மக்கள் அனுபவித்தனர். அதனால் அவர்களால் ஓரளவு சமாளிக்கமுடியும்."

"ஆனால் நகர்ப்புறங்களில் வசிப்போர்தான் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்."

என்றார் திரு. மோஹனரூபன்.

இதற்கிடையே இலங்கை மக்கள் விருப்பத்திற்கேற்ப புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டால்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று அவர் சொன்னார்.

முக்கியத் தரப்புகள் ஒன்றுகூடி நடுநிலையான அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்று திரு. மோஹனரூபன் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்