Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா - பல்லாயிரம் பேருக்கு உணவு... சமைக்கப்பட்டது எப்படி?

வாசிப்புநேரம் -
சௌத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் குடமுழுக்கு விழா நிறைவுபெற்றுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகம் எனப்படும் குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அவர்கள் அனைவருக்கும் வாழையிலையில் உணவு பரிமாறப்பட்டு வருகிறது.
இம்முறை 15,000 முதல் 17,000 பேர் உணவு உட்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தனைப் பேருக்கு உணவு தயாரிப்பது என்பது சாதாரண செயல் அல்ல.

காய்கறிகளை வெட்டவும் சமைக்கவும் பரிமாறவும் 1,200 தொண்டூழியர்கள் முன்வந்திருப்பதாக நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. கிருஷ்ணப்பன் ராமநாதன் 'செய்தி'யிடம் கூறினார்.

ஒரே நேரத்தில் 850 பேர் வரை அமர்ந்து உணவு உட்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாய் அவர் தெரிவித்தார்.
"காலை 8.40 மணியிலிருந்து உணவு பரிமாறப்படுகிறது. மாலை 3.30 மணி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

"மூத்தோர், உடற்குறையுள்ளோர், பிள்ளைகள் உள்ளோர் ஆகியோருக்குத் தனியாக ஒரு பிரிவு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில் அவர்கள் பொறுமையாக உணவை உட்கொள்ளலாம்."

என்று திரு. கிருஷ்ணப்பன் குறிப்பிட்டார்.
உணவைத் தயாரிக்கும் பணிகள் எப்போது தொடங்கின?

"நேற்று மதியம் 4 மணியிலிருந்து காய்கறிகளை வெட்டும் வேலை தொடங்கிவிட்டது. சுமார் நள்ளிரவில் சமையல் வேலைகள் ஆரம்பித்தன."

"உணவு கோயில் சமையல்காரர்களால் சமைக்கப்பட்டது. தொண்டூழியர்கள் உதவினர்."
"3 முதல் 4 கட்டங்களாக உணவு சமைக்கப்பட்டு பெருமாள் கோயிலில் இருந்து இங்கு அனுப்பப்பட்டது."

என்றார் திரு. கிருஷ்ணப்பன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்