சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் குடமுழுக்கு - 10,000க்கும் அதிகமானோர் திரண்டனர்
This audio is generated by an AI tool.
மார்சிலிங் ரைஸில் (Marsiling Rise) இருக்கும் ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது.
10,000க்கும் அதிகமான பக்தர்கள் திரண்டதாக அங்குள்ள செய்தி நிருபர் சுதேஷ்னி தனராஜ் சொன்னார்.
காலை 9 மணிக்கு ஆலயக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது.
அதைக் காண பக்தர்கள் அதிகாலை வேளையிலிருந்தே ஆலயத்திற்கு வருகைத் தந்தனர்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் குடமுழுக்கு விழா ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் 2020ஆம் ஆண்டிலேயே நடைபெற்றிருக்கவேண்டியது.
கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளால் அது ஒத்தி வைக்கப்பட்டது.
குடமுழுக்கை இப்போது கண்ட பக்தர்களுக்கு மகிழ்ச்சி.
தொழிலியல் பேட்டைக்கு அருகே இருக்கும் கோயிலுக்கு வட்டாரத்தில் பணியாற்றுவோர் அதிகம் வருவதாக நிருபர் சுதேஷ்னி கூறினார்.
ஏற்பாடுகள் 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியதாக ஏற்பாட்டுக்குழு சொன்னது.
குடமுழுக்கை அனைவரும் அமர்ந்துப் பார்ப்பதற்குத் தேவையான நாற்காலிகள்...மூத்தோருக்கு மட்டும் ஆலயத்துக்கு எதிரே சிறப்பு இடம்...அதிகாலையில் வந்தோருக்குச் சிற்றுண்டிகள் என சில சிறப்பு ஏற்பாடுகளைக் கண்டதாக நிருபர் சுதேஷ்னி சொன்னார்.
பக்தர்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.