Skip to main content
கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி - படங்களில்

வாசிப்புநேரம் -
கேலாங் ஈஸ்ட் வட்டாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழா இன்று நடைபெறுகிறது.

கலாசார, சமுதாய, இளையர் துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (Dinesh Vasu Das) கலந்துகொண்டு சிறப்பித்தார்.
Related article image
(படம்: ருபிகா)
Related article image
(படம்: அனு அருணாச்சலம்)
Related article image
(படம்: அனு அருணாச்சலம்)
சென்ற ஆண்டு ஜூன் 8ஆம் தேதி ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடந்தது.

எனவே, புதுப்பிப்புப் பணிகள் காரணமாகக் கடந்த முறை சிவராத்திரியின்போது அதிக அளவில் பக்தர்கள் கலந்துகொள்ள முடியவில்லை.
 
Related article image
(படம்: அனு அருணாச்சலம்)
இம்முறை சிவராத்திரி ஞாயிறன்று வந்துள்ளதால் சுமார் 30,000 பக்தர்களை எதிர்பார்ப்பதாக ஆலயத்தின் நிர்வாகக் குழுத் துணைத் தலைவர் திருமதி சுசிலா கணேசன் கூறினார்.

பக்தர்கள் மழையில் நனையாமல் இருக்கக் கூடாரங்கள், பால் குடம் எடுக்கும் பக்தர்களுக்குத் தனிவழி, முத்தோர், சிறப்புத் தேவையுள்ளவர்களுக்குத் தனிவழி, இதர பக்தர்களுக்குத் தனிவழி எனச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 15,000 பக்தர்கள் பால் குடம் செலுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related article image
(படம்: அனு அருணாச்சலம்)
Related article image
(படம்: அனு அருணாச்சலம்)
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்