Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்குப் புதிய நடைமுறைக் கோட்பாடுகள்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உள்ள பூச்சிக் கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்குப் புதிய நடைமுறைக் கோட்பாடுகள் அறிமுகம் கண்டுள்ளன.

அதிகப் பாதுகாப்பும் செயல்திறனும் மிக்க தீர்வுகளுக்கு அது வழியமைக்கும்.

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் முடிந்தவரை மனிதர்களுக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஏற்படும் தீங்கைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

சிங்கப்பூர் தரநிலை SS 721 என்று புதிய கோட்பாடு அழைக்கப்படும்.

இங்கு நடைபெற்ற அனைத்துலக டெங்கி பயிற்சிப் பயிலரங்கில் அது அறிமுகம் செய்யப்பட்டது.

உண்ணி, கொசு முதலிய பூச்சிகள், எலிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் வழிகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வொல்பாக்கியா திட்டத்தில் பயன்படுத்தப்படுவது போன்ற புத்தாக்க முறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

சமூகத்தில் அவற்றைப் பாதுகாப்பாகவும் சிறந்த முறையிலும் நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்