Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

StarHub தொலைக்காட்சி ஒளிபரப்பில் தடங்கல்

வாசிப்புநேரம் -
StarHub தொலைக்காட்சி ஒளிபரப்பில் தடங்கல் ஏற்பட்டதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலிஷ் பிரீமியர் லீக் காற்பந்துப் போட்டியின் கடைசி வார இறுதியான நேற்று (28 மே) தடங்கல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்றிரவு 11.30 மணிக்கு 10 காற்பந்து ஆட்டங்கள் ஆரம்பிப்பதற்குச் சற்று முன் தடங்கல் நேர்ந்ததாக DownDetector இணையத்தளம் குறிப்பிட்டது.

இரவு 11.37 மணி அளவில் 2,400க்கும் அதிகமான புகார்கள் பதிவாகின.

ஆட்டங்களின் ஒளிபரப்பில் ஏற்பட்ட தடங்கலை வாடிக்கையாளர்கள் சிலர் படம் எடுத்து Twitter-இலும் StarHub நிறுவனத்தின் Facebook பக்கத்திலும் பகிர்ந்தனர்.

செயற்கைக்கோளில் நேர்ந்த சிக்கலால் சேவைத் தடங்கல் ஏற்பட்டதாக Starhub நிறுவனம் CNA-யிடம் கூறியது.

நள்ளிரவுக்குள் தடங்கல் சரிசெய்யப்பட்டதாக அது சொன்னது.

தடங்கலுக்கு நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
ஆதாரம் : CNA/nh/rj

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்