Skip to main content
புதிய பேருந்து ஓட்டுநருக்கு அதிகச் சம்பளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

புதிய பேருந்து ஓட்டுநருக்கு அதிகச் சம்பளம்

வாசிப்புநேரம் -
புதிய பேருந்து ஓட்டுநருக்கு அதிகச் சம்பளம்
படம்: Facebook/Go-Ahead Singapore
வெளியீடு : 03 Jun 2026 05:16PM புதுப்பிப்பு : 03 Jun 2026 05:17PM

வேலைக்குச் சேரும் புதிய பேருந்து ஓட்டுநர்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அதிகச் சம்பளம் வழங்கப்படவிருக்கிறது.

மாதச் சம்பளம் 450 வெள்ளி கூடும்.

வேலைக்குச் சேர்ந்த முதல் ஆண்டில் கூடுதலாக 2,000 வெள்ளி போனஸும் கிடைக்கும்.

படித்தொகை, போனஸ், கூடுதல் நேர வேலைக்கான சம்பளம் போன்றவற்றைச் சேர்த்துப் பார்த்தால் முதல் ஆண்டில் மாதம் சுமார் 600 வெள்ளி அதிகச் சம்பளம் கிடைக்கும்.

சராசரி மாதச் சம்பளம் 4,000 வெள்ளிக்குமேல் இருக்கும்.

தற்போது வேலையில் இருக்கும் ஓட்டுநர்களுக்கும் ஒரு முறை போனஸ் வழங்கப்படும்.

சிங்கப்பூரில் உள்ளூர் ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறைகிறது.

2021இல் ஓட்டுநர்களில் 54 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள்.

கடந்த ஆண்டு அந்த விகிதம் 41 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

உள்ளூர்வாசிகள் இன்னும் அதிகமானோரை ஈர்க்கச் சம்பளம் அதிகரிக்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சு கூறியது.

பேருந்து ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களின் வேலைச்சூழல் மேம்படும் என்று போக்குவரத்துக்கான தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியோ (Jeffrey Siow) குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்