Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பதவியேற்புச் சடங்கு விருந்து உபசரிப்பில் என்னென்ன உணவுவகைகள் இருக்கும்?

வாசிப்புநேரம் -
பதவியேற்புச் சடங்கு விருந்து உபசரிப்பில் என்னென்ன உணவுவகைகள் இருக்கும்?

(படம்: CNA)

இஸ்தானாவில் இன்று நடைபெறவிருக்கும் பதவியேற்புச் சடங்கில் கலந்துகொள்வோருக்குச் சிங்கப்பூர் உணவுவகைகளைக் கொண்ட விருந்து உபசரிப்பு காத்திருக்கிறது.

இன்றிரவு 8 மணிக்குத் துணைப்பிரதமர் திரு. லாரன்ஸ் வோங் பிரதமராகப் பதவியேற்பார்.

அதன் பின்னர் விருந்து உபசரிப்பு நடைபெறும்.

20 விதமான உணவுவகைகளை விருந்தினர்கள் உண்டு மகிழலாம்.

5 உணவங்காடிக்காரர்களின் கைப்பக்குவத்தையும் சுவைத்துப் பார்க்கலாம்.

உணவில் சேர்க்கப்படும் மீன், கோழி, வாத்து, காய்கறிகள் அனைத்தும் சிங்கப்பூர்ப் பண்ணைகளில் வளர்ந்தவை.

என்னென்ன உணவுகளை விருந்தினர்கள் எதிர்பார்க்கலாம்?

- தண்டூரி மீன்

- தவ்வு கோரேங் (Tauhu Goreng)

- இறால் வடை

- சிறிய பிரெஞ்சு பேஸ்ட்ரி வகைகள்

- நாசி லெமாக்

- போப்பியா (Popiah)

- இறால் நூடல்ஸ்

- ரொட்டி ஜான்

- வறுத்த வாத்து சாலட்

- சைவ மீ சியாம்

- இனிப்புப் பலகார வகைகள்
Related article image
(படம்: CNA)
விருந்துக்கான ஆயத்தப் பணிகள் 3 நாள்களுக்கு முன்பு தொடங்கிவிட்டதாக அதை மேற்பார்வையிடும் சமையல் நிபுணர் திரு. அல்வின் லியோங் (Alvin Leong) கூறினார்.

அவர் Parkroyal Collection Pickering நிறுவனத்தின் நிர்வாகச் சமையல் நிபுணர்.

இன்றைய விருந்தை மொத்தம் 50 சமையல்காரர்கள் தயாரிப்பதாக அவர் சொன்னார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்