Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுப் போக்குவரத்தில் மாறி மாறிச் செல்லும்போது பயணக் கட்டணம் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பலர் பேருந்து, ரயில் என மாறி மாறி இடங்களுக்குச் செல்வதுண்டு.

அதற்கான கட்டணம் ஒருவரின் முழுப் பயணத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) சொன்னார்.

ஒருவர் பொதுப் போக்குவரத்தில் எத்தனை முறை மாறி மாறிச் செல்கிறார், அவர் மாறி மாறிச் செல்வதற்கு எவ்வளவு நேரம் எடுத்துகொள்கிறார், அவர் மொத்தம் எவ்வளவு நேரம் பயணம் செய்கிறார் என்பவை கருத்தில் கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

தற்போது பொதுப் போக்குவரத்தில் மாறி மாறிச் செல்வதற்கு 45 நிமிட அவகாசம் அனுமதிக்கப்படுகிறது.

அவகாசத்தை மிஞ்சினால் அது இன்னொரு பயணமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் அவகாசம் அதிகரிக்கப்படுமா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குத் திரு சீ எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

பயணிகள் பெரும்பாலோர் 30 நிமிடங்களே எடுத்துகொள்வதாக அவர் சொன்னார்.

45 நிமிடங்களுக்கு மேல் எடுத்துகொள்வோர் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று திரு சீ சொன்னார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்