சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
வெளிநாடு செல்ல முடியாதபோது சிங்கப்பூரர்கள் நாடிய மாற்றுவழி... Staycay! - இப்போது?

COVID-19 பயணக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தபோது சிங்கப்பூரர்களில் பலரும் நாடிய மாற்றுவழிகளில் ஒன்று "staycay" அல்லது Staycation என்றழைக்கப்படும் சிங்கப்பூரில் இருந்துகொண்டே ஹோட்டலில் தங்கி விடுமுறையை கழிப்பது.
2020ஆம் ஆண்டு...
- வெளிநாட்டுப் பயணங்கள் தடைசெய்யப்பட்டன.
- 2020 ஜூலை நடுப்பகுதியில் சிங்கப்பூரில் சுமார் 35 ஹோட்டல்கள் திறக்க அனுமதி பெற்றன.
- பெரும்பாலானவற்றின் அனைத்து அறைகளும் 2020 ஆகஸ்ட் நடுப்பகுதிவரை நிரம்பியிருந்தன.
- அவற்றில் பெரும்பாலானவை Staycation தொகுப்புகளை வழங்கின.
2021ஆம் ஆண்டு...
- செப்டம்பர் முதல் நவம்பர் வரை சிங்கப்பூரர்களில் 86 விழுக்காட்டினர் உள்நாட்டில் இருந்தவாறு விடுமுறையைக் கழிக்கத் திட்டமிட்டனர். Staycation மிகவும் பிரபலமாக இருந்தது.
2022ஆம் ஆண்டு...
இன்னமும் சிங்கப்பூரில் பல ஹோட்டல்கள் Staycation சிறப்புச் சலுகைகளை வழங்குகின்றன.
இருப்பினும் அதைப் பயன்படுத்தும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துவிட்டதாய் Lloyd's Inn ஹோட்டல் 'செய்தி'யிடம் சொன்னது.
- 2022 முற்பாதி - ஹோட்டலில் தங்கிய 80 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள்
- 2022 இரண்டாம் பாதி - ஹோட்டலில் தங்கியவர்களில் 28 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூரர்கள்

Staycay விடுமுறையை நாடும் சிலரிடமும் 'செய்தி' பேசியது...
அந்தக் காலக்கட்டத்தில்
"விடுமுறைக்கான ஒரே வழி இதுவாகத்தான் இருந்தது,"
என்றார் லாவண்யா நித்தா பெரேரா.

"ஓர் இடைவேளை தேவைப்பட்டபோது Staycay விடுமுறை நன்றாக இருந்தது,"
என்றார் ஷாலினி திருப்பதி.
சில அழகான உள்ளூர் ஹோட்டல்களில் தங்குவதற்கு அதிகக் கட்டணம் செலுத்தவேண்டியிருப்பதாகச் சொன்னார் ஷாலினி.
அதே பணத்தைக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்றால், சொகுசு ஹோட்டல்களிலும் தங்கலாம், வேறு நாட்டுக்கும் செல்லலாம் என்றார் அவர்.

இருப்பினும் Staycation விடுமுறையை இன்னமும் சிலர் பாதுகாப்பான தெரிவாக வைத்திருப்பதாக 'செய்தி'யிடம் பேசிய சில ஹோட்டல்கள் கூறின.
- சில நாடுகளில் கிருமிப்பரவல் தொடர்கிறது என்று அஞ்சுவோர்
- திடீர் அபாயத்தைத் தவிர்க்க விரும்புவோர்
- வயதானவர்களை வெளிநாடு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று நினைப்போர்
- இளைப்பாற உள்ளூரில் ஒரு நல்ல இடம் இருந்தால் போதும் என்று நினைப்போர்

இவர்களால், அந்தப் போக்கு தொடர்வதாக அவை கூறுகின்றன.
ஆண்டிறுதியை வீட்டைத் தவிர்த்து வேறோர் இடத்தில் கழிப்பதில் தனி சுகம் என்று பலரும் நினைப்பதால் வெளிநாடுகளுக்குச் செல்லாதவர்கள், உள்ளூர் ஹோட்டல்களைத் தொடர்ந்து நாடுகின்றனர்.