Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பச்சைக்கு மாறும் சிங்கப்பூரின் DORSCON எச்சரிக்கை நிலை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் DORSCON (Disease Outbreak Response System Condition) எச்சரிக்கை நிலை பச்சை நிறத்துக்கு மாற்றப்படவுள்ளது.

அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு அதனைத் தெரிவித்தது.

எச்சரிக்கை நிலை வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 13) மாற்றப்படும். பச்சை நிறம், ஆகக் குறைவான விழிப்புநிலையைக் குறிக்கும். சமூகத்தில் நோய்ப்பரவல் மிதமான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என்பதை அது குறிக்கும்.

COVID-19 பரவல் அனைத்துலக அளவிலும் உள்ளூர் அளவிலும் கணிசமாகக் குறைந்துள்ளது; தடுப்பூசி போட்டுக்கொண்ட தனிநபர்களிடையே நோய்த்தொற்றின் பாதிப்பும் மிதமாக உள்ளது;

சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பிலும், அன்றாட வாழ்க்கையிலும் அவ்வளவாகச் சிரமங்கள் இல்லாத நிலையில் DORSCON எச்சரிக்கை நிலை மாற்றப்படுவதாகப் பணிக்குழு குறிப்பிட்டது.

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிருமி வேகமாகப் பரவத் தொடங்கியபோது எச்சரிக்கை நிலை ஆரஞ்சு நிறமானது.

நிலைமை சற்று சீரானதால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அது மஞ்சளுக்குக் குறைக்கப்பட்டது.

DORSCON எச்சரிக்கை நிலை என்பது நாட்டின் அப்போதைய சுகாதார நிலவரத்தைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்