Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் குங்குமப்பூ உற்பத்தியா? ஸ்ட்ராபெர்ரிகூட அறுவடை செய்யலாமா?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பொதுவாக விளையாத குங்குமப்பூ, ஸ்ட்ராபெர்ரி ஆகியவை விரைவில் உற்பத்தி செய்யப்படலாம்.

Singrow எனும் உள்ளரங்குப் பண்ணையில் அவை சிறப்புத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பயிர்கள் பருவநிலை மாற்றத்தைத் தாக்குப்பிடிப்பதற்கு மரபணுவை மாற்றக்கூடிய agri-genomics தொழில்நுட்பம் உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரி செடிகளை வழக்கத்தைவிட அதிகமான தட்பநிலையில் வளர்க்கமுடியும்.

பழங்களைப் பருவ அடிப்படையில் இல்லாமல் ஆண்டு முழுதும் அறுவடை செய்யலாம்.

செடிகள் இரண்டே மாதங்களில் கனிந்துவிடும். வழக்கமாக எடுக்கப்படும் நேரத்தை விட அது 30 விழுக்காடு குறைவு.

agri-genomics தொழில்நுட்பம் குறைவான நிலத்தில் அதிக உற்பத்திக்கு வகைசெய்கிறது.

அரிசி, சோளம், காய்கறிகள் ஆகியவற்றுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தமுடியுமா என்பது குறித்து
Singrow பண்ணையில் ஆய்வு நடத்தப்படுகிறது.

வெளிநாட்டில் இருப்புகளின் விநியோகத்திற்குத் தடை ஏற்பட்டால் சிங்கப்பூர் அவ்வளவாகப் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு இத்தகைய முயற்சிகள் உதவக்கூடும்.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்