Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"சமூகத்தின் முன்னேற்றமும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதும் தொடர்ந்து தேசிய முன்னுரிமைகளாக இருக்கும்"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் அதன் குடிமக்களுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவை வலுப்படுத்தும் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியுள்ளார்.

15ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து அவர் பேசினார்.

பொருளாதார மாற்றத்திற்கேற்ப ஊழியர்கள் செயலாற்றுவதும் அதில் அடங்கும்.

செலவு கூடுவதால் குடும்பங்களுக்கு ஏற்படும் சுமையைக் குறைக்கவும் மூத்தோர் கண்ணியமாக மூப்படையவும் தேவையான ஆதரவு வழங்கப்படும் என்று திரு தர்மன் குறிப்பிட்டார்.

சமூகத்தின் முன்னேற்றமும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதும் தொடர்ந்து தேசிய முன்னுரிமைகளாக இருக்கும்;

சிங்கப்பூரின் வெற்றி பொருளாதார வளர்ச்சியை மட்டுமல்லாமல் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களின் முன்னேற்றத்தையும் வைத்தே மதிப்பிடப்படவேண்டும் என்று அதிபர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் யாரும் பின்தங்கிவிடாமல் ஒவ்வொரு தலைமுறையும் நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கிச் செல்வதை உறுதிசெய்வது முக்கியம் என்றார் அவர்.

வேலையிடத்தில் பயிற்சியும் வாழ்க்கைத்தொழில் பாதைகளும் மேம்படுத்தப்படும்;

இதனால் சிங்கப்பூரர்கள் வெவ்வேறு திறன்களிலும் வேலைகளிலும் மிகச்சிறந்து விளங்கமுடியும் என்று அதிபர் தர்மன் தெரிவித்தார்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்