Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மேலும் அதிகமான மாணவர்களுக்கு மூன்றாம் மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

வாசிப்புநேரம் -

உயர்நிலைப் பள்ளிகளில் மேலும் அதிகமான மாணவர்கள் மூன்றாம் மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம்.

அது குறித்த முன்னோடித் திட்டம் வரும் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தின்கீழ், மாணவர்கள் மொழியைத் தங்களது நிபுணத்துவத்திற்கு ஏற்ப வெவ்வேறு நிலைகளில் கற்றுக்கொள்ளமுடியும் என்று கல்வியமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் கூறினார்.

பள்ளியின் ஒவ்வோர் அரையாண்டுப் பருவத்தின் தொடக்கத்திலும் மாணவர்கள் ஒரு பாடத்தொகுதியில் பயிலலாம்.

அவ்வாறு  மாணவர்கள் தங்களது பள்ளி வாழ்க்கை முழுவதும் மூன்றாம் மொழியில் நிபுணத்துவம் பெறமுடியும் என்று திரு. சான் கூறினார்.

மூன்றாம் மொழியைக் கற்கும் திட்டம்வழி, மாணவர்கள் புதிய மொழியைக் கற்றுக்கொள்வதுடன் மற்ற கலாசாரங்கள் குறித்தும் தெரிந்துகொள்ளமுடியும் என்று கூறப்பட்டது.

செய்தி செயலி பல்வேறு புதிய அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது.  இப்போதே ‘Update’ செய்யுங்கள் அல்லது ‘Mediacorp Seithi’ செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்! 

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்