மீண்டும் மீண்டும் மின்-சிகரெட்டுடன் பிடிபடும் மாணவர்கள் - 3 பிரம்படிகள்
(படம்: CNA/Lim Li Ting)
பள்ளிகள், உயர்கல்வி நிலையங்களில் மின்-சிகரெட்டுடன் பிடிபடும் மாணவர்கள் அடுத்த திங்கட்கிழமை (செப்டம்பர் 1) முதல் கடுமையான தண்டனைகளை எதிர்நோக்குவர் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
முதல் முறை பிடிபடுபவர்கள்:
- பள்ளியிலிருந்து 3 நாள் வரையிலான தற்காலிக நீக்கம்
- நடத்தைக்கான மதிப்பீடு பாதிக்கப்படும்
- ஆண்களுக்கு ஒரு பிரம்படி
மறுபடி பிடிபடுபவர்கள்:
- பள்ளியிலிருந்து 14 நாள் வரையிலான தற்காலிக நீக்கம்
- நடத்தைக்கு மோசமான மதிப்பீடு வழங்கப்படும்
- ஆண்களுக்கு அதிகபட்சம் 3 பிரம்படிகள்
Etomidate கலந்து Kpod எனும் மின்-சிகரெட்டுடன் பிடிபடுவோர் மீது இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களுக்குக் கூடுதலான ஒரு பிரம்படி விதிக்கப்படும். அவர்கள் பள்ளியிலிருந்து கூடுதலான நாள்களுக்கு நீக்கப்படுவர்.
பள்ளிகள் கூடுதல் தண்டனைகளை விதிக்கலாம்.
மாணவர்களை நிரந்தரமாகப் பள்ளியிலிருந்து வெளியாக்கும் அதிகாரம் பள்ளிகளுக்கு உண்டு.
சுகாதார அறிவியல் ஆணையம் அல்லது மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விதிக்கும் தண்டனைகளையும் மாணவர்கள் எதிர்நோக்கக்கூடும்.