Skip to main content
"முட்டாள்தனமான கேள்வி"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"முட்டாள்தனமான கேள்வி" - நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை

வாசிப்புநேரம் -
"முட்டாள்தனமான கேள்வி" - நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை
படம்: CNA
நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் தியோங் இன்று (Kenneth Tiong) நாடாளுமன்றத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் (Chee Hong Tat) முட்டாள்தனமான கேள்வியைக் கேட்டதாகத்
திரு தியோங் சொன்னார்.

அந்த வார்த்தை ஏற்புடையது அல்ல; அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று அமைச்சர் சீ கூறினார்.

திரு தியோங் தம்முடைய கருத்தை மீட்டுக்கொண்டு அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்டார்.

அதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சீ திரு தியோங் பிறருக்கு மரியாதை கொடுத்துக் கண்ணியமாகப் பேசவேண்டும் என்றார்.

நிதித்துறையில் குற்றங்களைத் தடுக்கக் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுமா என்று திரு தியோங் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

பாட்டாளிக் கட்சி அபாயங்களற்ற நடைமுறையைக் கடைப்பிடிக்க விரும்புகிறதா அல்லது அளவான அபாயம் உள்ள நடைமுறையைப் பின்பற்ற விரும்புகிறதா என்று அமைச்சர் எதிர்கேள்வி கேட்டார்.

அந்தக் கேள்வி அர்த்தமற்றது என்று திரு தியோங் சொன்னதை அடுத்து சர்ச்சை வெடித்தது.

உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் மாண்பைக் கடைப்பிடித்துக் கண்ணியமாக நடந்துகொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற நாயகர் சியா கியான் பெங் (Seah Kian Peng) அறிவுறுத்தினார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்