Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

தகிக்கும் வெப்பத்தைத் தணிக்கும் பானங்கள்

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியாவில் பல நாடுகளைக் கொளுத்தும் வெயில் வாட்டுகிறது. சிங்கப்பூரிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இன்று (12 மே) சுவா சூ காங்கில் (Choa Chu Kang) வெப்பத்தின் அளவு 36.2 டிகிரி செஸ்சியஸைத் தொட்டது. அது இந்த ஆண்டில் (2023) பதிவான மிகக் கடுமையான வெப்பம்.

வெப்பம் அதிகரிக்கும்போது உடல்சூடும் அதிகரிக்கும். உடல்சூட்டைத் தணிக்க தண்ணீர் சிறந்தது என்று அனைவருக்கும் தெரியும்.
(படம்: முதன்மை ஊட்டச்சத்து, உணவியல் நிபுணர் சங்கமித்ரா)
தண்ணீர் அல்லாமல் வேறு எவ்வகை பானங்களை அருந்தலாம் என ஆலோசனை கூறுகிறார் முதன்மை ஊட்டச்சத்து, உணவியல் நிபுணர் சங்கமித்ரா.
(படம்:unsplash)
இளநீர்
பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் முதலிய தாதுப்பொருள்கள் கொண்ட இளநீர் தசை, நரம்புகளை வலுப்படுத்தும்.
 
(படம்:unsplash)
'அலோ வேரா' (Aloe Vera) பானம்
வைட்டமின் சி, தாதுக்கள் அடங்கிய இந்தப் பானல் உடலில் அழற்சியைத் தடுக்கும்.
 
(படம்:unsplash)
'லெமனெட்' (Lemonade)
வைட்டமின் சி நிறைந்த 'லெமனெட்' புத்துணர்ச்சி தரும். தேன், இஞ்சி கலந்தும் குடிக்கலாம்.
(படம்:unsplash)
'கிரீன் ஸூமூத்திஸ்' (Green Smoothies)
'Spinach', 'Kale' கீரைகள், வாழைப்பழம், 'berries' ஆகியவற்றுடன் தண்ணீர் அல்லது இளநீர் சேர்த்து அரைத்து அருந்தலாம். உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும்.
(படம்:unsplash)
'ஹெர்பல் டீ' (Herbal Teas)
'கெமோமைல்' (chamomile) அல்லது செம்பருத்தி டீ செரிமானத்தை அதிகரிக்கும்.
(படம்:unsplash)

பால்
கால்சியம், வைட்டமின் டி நிறைந்த பாலில் பழங்கள் அல்லது தேன் கலந்தும் குடிக்கலாம்.

சோடா போன்ற இனிப்புப் பானங்களில் கலோரியின் அளவு அதிகம் உள்ளதால் உடற்பருமன், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே அவற்றைத் தவிர்த்தல் சிறப்பு என்றார் சங்கமித்ரா.

பிள்ளைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளைக் கொடுக்கலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். சமையலில் வெப்பத்தைத் தணிக்கும் தன்மை கொண்ட மஞ்சள்தூள், இஞ்சி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்க்கலாம் என்கிறார் சங்கமித்ரா.

வெயில் காலத்துக்கு உகந்த 5 பானங்கள் - பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சங்கமித்ரா

🥭மாம்பழ லஸ்ஸி (Mango Lassi)

தேவையான பொருள்கள்:
1 கப் பழுத்த மாம்பழம்
1 கப் தயிர்
1/2 கப் பால்
1-2 தேக்கரண்டி தேன்
ஒரு சிட்டிகை பட்டைத் தூள்

செய்முறை:
அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து குளிர வைத்துப் பரிமாறலாம்.

🥛மசாலா மோர்

தேவையான பொருள்கள்:
2 கப் மோர்
1/4 தேக்கரண்டி வறுத்த சீரகத்தூள்
1/4 தேக்கரண்டி கறுப்பு உப்பு
ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
கொத்தமல்லி இலை

செய்முறை:
மோரை நன்றாக அடித்து அதில் மசாலாக்களைச் சேர்த்து கொத்தமல்லி இலைகள் தூவி குளிர வைத்துப் பரிமாறலாம்.

🍉தர்பூசணிப் பழ ஜூஸ்

தேவையான பொருள்கள்:
2 கப் நறுக்கிய தர்பூசணிப் பழத் துண்டுகள்
1 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு
ஒரு சிட்டிகை கறுப்பு உப்பு (விரும்பினால்)
புதினா இலைகள்

செய்முறை:
தர்பூசணிப் பழத்துண்டுகளை அரைத்து அதில் எலுமிச்சைச் சாறு, கறுப்பு உப்பு கலந்து புதினா இலைகள் தூவி குளிர வைத்து அருந்தலாம்.

🌼 'கிறிஸாந்தமம் டீ' (Chrysanthemum Tea)

தேவையான பொருள்கள்:
1/2 கப் உலர்ந்த கிறிஸாந்தமம் பூக்கள்
4 கப் தண்ணீர்
1-2 தேக்கரண்டி தேன் (விரும்பினால்)

செய்முறை:
கொதிக்க வைத்த தண்ணீரில் உலர்ந்த கிறிஸாந்தமம் பூக்களைப் போட்டு 10 -15 நிமிடங்களுக்கு வேக வைத்து வடிகட்டி, வேண்டுமென்றால் தேன் கலந்து பரிமாறவும்.
 

🟢'அலோ வேரா ஜூஸ்' (Aloe Vera Juice)

தேவையான பொருள்கள்:
1/2 கப் 'அலோ வேரா' விழுது
2 கப் தண்ணீர்
1-2 தேக்கரண்டி தேன் (விரும்பினால்)
1/2 தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு

செய்முறை:
'அலோ வேரா' விழுதைத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். எலுமிச்சைச் சாற்றுடன் வேண்டுமென்றால் தேன் கலந்து அருந்தலாம்.

சுருக்கமாகப் பார்க்க

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்