Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'ஒற்றுமை, நம்பிக்கை, விடாமுயற்சி - இதுவே சிங்கப்பூர் உருட்டுப்பந்துக் குழுவின் வெற்றி ரகசியம்'

சிங்கப்பூர் தேசிய உருட்டுப்பந்துக் குழுவில் இடம்பிடித்த முதல் இந்தியர், உருட்டுப்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் திரு. சுரேன் சந்திரசேகரன் - 'செய்தி'க்கு அளித்த நேர்காணல்

வாசிப்புநேரம் -
'ஒற்றுமை, நம்பிக்கை, விடாமுயற்சி - இதுவே சிங்கப்பூர் உருட்டுப்பந்துக் குழுவின் வெற்றி ரகசியம்'

(படம்: சுரேன் சந்திரசேகரன்)

சிங்கப்பூரின் உருட்டுப்பந்துக் குழு 31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடி 3 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

ஆனால் அதை நோக்கிய பயணம் ஏற்றத் தாழ்வுகளின்றி இல்லை என்கிறார் சிங்கப்பூர் உருட்டுப்பந்து சம்மேளனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் திரு. சுரேன் சந்திரசேகரன்.

<p>(படம்: Singapore Bowling Federation)</p>

பயிற்றுவிப்பாளர்களுக்கு உதவுவது அவரது பணி.


31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகள் ஓர் அருமையான அனுபவமாக அமைந்தது.


உருட்டுப்பந்துக் குழுவைப் பொறுத்தவரை, போட்டியின் இறுதி நாளில் நாங்கள் முன்னணியில் இல்லை. ஆனால் நாங்கள் சோர்ந்துவிடவில்லை. குழுவாக ஒற்றுமையுடன் செயல்பட்டோம். திறமையாக உத்திகளைத் திட்டமிட்டோம்.

விளைவு? வெற்றி!

என்றார் திரு. சுரேன்.

சிங்கப்பூர் உருட்டுப்பந்துக் குழு எப்படிப் பயிற்சி செய்தது?

போட்டிகளுக்கு முன்பு 6 வாரப் பயிற்சி இருந்தது. வாரத்திற்கு 5 முதல் 6 முறை சிங்கப்பூரின் வெவ்வேறு இடங்களில் பயிற்சி நடந்தது."

பல்வேறு சூழல்களுக்குப் போட்டியாளர்களைத் தயார்ப்படுத்துவதே அதன் நோக்கம் எனத் திரு. சுரேன் குறிப்பிட்டார்.

உருட்டுப்பந்தில் ஆர்வம் எப்படி?

தமது தந்தை, சந்திரசேகரன் பாலராஜூ தான் உருட்டுப்பந்தில் தமக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியதாகத் திரு. சுரேன் கூறினார்.

சிங்கப்பூர் தேசிய உருட்டுப்பந்துக் குழுவில் இடம்பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமை திரு. சந்திரசேகரனையே சேரும்.

அப்போது அவர் 40களில் இருந்தார்.

தற்போது திரு. சந்திரசேகரன் உள்ளூர் கழகம் ஒன்றில் தலைமை பயிற்றுவிப்பாளராக உள்ளார்.

உங்களின் உருட்டுப்பந்து அனுபவம்?

"நான் சிங்கப்பூரின் முதல் two-handed உருட்டுப்பந்து வீரர். கட்டைவிரலைப் பயன்படுத்தாமல் பந்தை உருட்டும் நுட்பம் அது. உலகின் தலைசிறந்த உருட்டுப்பந்து வீரர்கள் அனைவரும் அந்த நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்கள்"

என்றார் திரு. சுரேன்.

அந்த நுட்பம் மூலம் பந்தை அதிக சக்தியுடன் உருட்டலாம் என்று அவர் விவரித்தார்.

விளையாட்டில் ஆர்வம் உண்டு... ஆனால் முழு மூச்சாக இறங்கத் தயங்குவோருக்கு நீங்கள் கூற விரும்புவது?


கனவு இருந்தால், அதை நோக்கி அயராது உழைக்க வேண்டும். வியர்வை, கண்ணீர் சிந்தாமல் முழு நேர விளையாட்டு வீரராக முடியாது.


"தோல்வி அடையவும் தயாராக இருக்க வேண்டும். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறோம் என்பது தான் முக்கியம்."

என்கிறார் திரு. சுரேன்.

31ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்ற, சிறப்பாக விளையாடிய அனைத்து விளையாட்டாளர்களுக்கும் வாழ்த்துகள்!

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்