Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இளையர்களுக்கு நீடித்தநிலைத்தன்மை, பசுமை முயற்சிகளுக்குப் பங்களிப்பது தொடர்பான பயிற்சிகள்

வாசிப்புநேரம் -
நீடித்தநிலைத்தன்மை, பசுமை முயற்சிகளுக்குப் பங்களித்து மாற்றத்தைக் கொண்டுவருவது தொடர்பான பயிற்சிகள் இளையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நார்த் வெஸ்ட் பசுமைப் பயிற்சி முகாமில் உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த 70க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பசுமை தொடர்பான சிந்தனைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் அவர்களுக்கு வளமும் தளமும் வழங்கப்பட்டன.

வட மேற்குச் சமூக மேம்பாட்டு மன்றம்,
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சமூகச் சேவை வளர்ச்சி, வாய்ப்பு மன்றம் ஆகியவை பயிற்சி முகாமுக்குக் கூட்டாக ஏற்பாடு செய்தன.

அன்றாட வாழ்க்கையில் பசுமை அம்சங்களை எப்படிச் செயல்படுத்தலாம் என்பது குறித்துச் சிந்திக்க இளையர்களுக்கு சவால்கள் தரப்பட்டன.

கொள்கைகளை மேம்படுத்துவது பற்றியும் அவர்களிடம் யோசனைகள் நாடப்பட்டன.

சிறப்பாகச் செய்த மூன்று இளையர் அணிகள் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டன.
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்