Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 சோதனைக் கருவிகளின் பற்றாக்குறையை எதிர்கொள்ள 3 விதமான சோதனைக் கருவிகளை உருவாக்கியுள்ள NUS ஆய்வாளர்கள்

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைகழக ஆய்வாளர்கள்,கொரோனா கிருமித்தொற்றைக் கண்டறிய உதவும் 3 விதமான சோதனைக் கருவிகளை உருவாக்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
COVID-19 சோதனைக் கருவிகளின் பற்றாக்குறையை எதிர்கொள்ள 3 விதமான சோதனைக் கருவிகளை உருவாக்கியுள்ள NUS ஆய்வாளர்கள்

(படம்: NUS)

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைகழக ஆய்வாளர்கள்,கொரோனா கிருமித்தொற்றைக் கண்டறிய உதவும் 3 விதமான சோதனைக் கருவிகளை உருவாக்கியுள்ளனர்.

Python, IM2, IM3 என்று அவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

விநியோக முறையில் ஏற்படும் தடங்கல் காரணமாக சோதனைக் கருவிகளுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டைப் போக்க அவை பெரிதும் கைகொடுக்கும்.
Injection moulding' எனும் முறையில் சில நிமிடங்களில் இந்த 3 விதமான சோதனைக் கருவிகளையும் நூற்றுக்கணக்கில் உருவாக்கமுடியும்.

சிங்கப்பூரில், சோதனைக் கருவிகளுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தப் பல்கலைகழகத்தின் இரு ஆய்வுக் குழுக்கள் இவற்றை உருவாக்கியுள்ளன.

கிருமித்தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய Nasopharyngeal எனும் கருவியை ஒருவருடைய மூக்கில் நுழைத்து அங்கிருந்து திரவ மாதிரி எடுத்துப் பரிசோதிக்கப்படும்.

இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்ட புதிய Python கருவி,திரவத்தை நன்கு உறிஞ்சக் கூடியது.

அதேநேரம், சோதிக்கப்படும் நபருக்கு அதனால், பெரிய சிரமம் ஏற்படாது.

Python கருவி மூலம், செய்யப்படும் சோதனை முடிவுகளுக்கும்,ஏற்கனவே புழக்கத்தில் உள்ள கருவிகள் மூலம் செய்யப்படும் சோதனை முடிவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை ஆய்வுக்குழு சுட்டியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்