Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

மனைவி, இப்போது தாய் - "புதிய பரிமாணத்தில் மனைவியைக் காண்கிறேன்"

வாசிப்புநேரம் -

இயற்கையின் மிகச் சிறந்த படைப்பு மனிதன். 

உலகில் ஒவ்வொரு மனிதனையும் ஈன்றெடுப்பவள் ஒரு தாய். 

தாய்மைக்கு நிகரான உணர்வு உலகில் ஏதுமில்லை. 
அந்த உன்னத நிலையை அடைந்த பெண்களின் பூரிப்பு அவளை அருகிலிருந்து பார்ப்போருக்கு மட்டுமே தெரியும். 

அண்மையில் தாயான தமது மனைவியின் உணர்வுகள் பற்றி அவரது கணவர் என்ன நினைக்கிறார்?

அன்னையர் தினத்தை ஒட்டி சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரில் பலருக்கும் தெரிந்த சிலருடன் பேசியது 'செய்தி'...
 

தாய்மை அடைந்த என் மனைவியின் மனரீதியான வளர்ச்சியைக் கண்டு அவரை இன்னும் அதிகமாக மதிக்கிறேன்

என்கிறார் தொலைக்காட்சி நாடகக் கலைஞர் எபி ஷங்கரா. 

பிரபலத் தொலைக்காட்சி நட்சத்திரமான அவரது மனைவி நித்தியாவை நீண்ட காலமாகத் தெரியும் என்று கூறிய எபி, அவரது மனத்தளவிலான வளர்ச்சியைப் பாராட்டினார். 

பிள்ளை வளர்ப்பில் சில நேரங்களில் ஐயங்கள் ஏற்படுவது பெற்றோரிடையே வழக்கம்... அந்நேரங்களில்...

பிள்ளையின் தேவைக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.  பிள்ளைக்காகப் புதிதாய்ச் செய்யவிரும்பும் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார். அது ஒரு தாயால் மட்டுமே முடியும். 

என்கிறார் எபி. 

தூக்கம், பசி இப்படி எதையும் பொருட்படுத்தாமல் பிள்ளையைத் தன்னலமின்றி தம் மனைவி பராமரிப்பதைக் கண்டு  நெகிழ்வதாகச் சொல்கிறார் தொலைக்காட்சிப் பாடகர் விஜய் ஆனந்த். 

பிள்ளைக்குத் தேவைப்படும் அனைத்தையும் முடிந்த அளவுக்கு அவர் உடனுக்குடன் செய்வது தமக்கு ஆச்சரியமாக இருக்கும் என்றார் விஜய்.

பிள்ளை பிறந்த பிறகு மனைவி மீதான தமது அன்பு கூடியிருப்பதாகச் சொன்னார் விஜய்.

பிரசவ விடுப்புக்குப் பின் மீண்டும் வேலைக்குத் திரும்பவேண்டிய நிலையில் என் மனைவி, வீட்டையும் வேலையையும் சமாளிக்கவேண்டியிருந்தது. அதன் காரணமாக அவரது வழக்கமான நடவடிக்கைகளை விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று

என்று அன்னையரின் தியாக மனப்பான்மையைப் பாராட்டினார் விஜய்.

தாயின் பொறுப்புகளை மிக விரைவில் என் மனைவி ஏற்றுக்கொண்டு அதைச் சரிவரச் செய்வதைக் கண்டேன்

என்கிறார் தொலைக்காட்சிக் கலைஞர் கார்த்திக் லோகன். 

தொலைக்காட்சிப் பிரபலமான அவரது மனைவி மஹாலட்சுமி, தாயானதிலிருந்து பெரிய அளவிலான மனவுறுதியுடன் செயல்படுவதை ரசிப்பதாகவும் அவர் சொன்னார். 

சொந்தத் தொழில் நடத்தும் அவர் மிகக் கடினமாக உழைக்கவேண்டியிருக்கிறது. அதே வேளையில் மகனின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்

என்றார் அவர். 

சிறு குழந்தையான அவரது மகனுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதைக் கண்டறிவதில் சில நேரங்களில் சிரமப்படும்போது மனைவிதான் ஐயங்களைத் தீர்க்கும் கலங்கரை விளக்கமாக விளங்குகிறாராம்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்