Skip to main content
வீடுபுகுந்து திருடிய சீன நாட்டவருக்கு 5.5 ஆண்டுச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வீடுபுகுந்து திருடிய சீன நாட்டவருக்கு 5.5 ஆண்டுச் சிறை

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

விண்ட்சர் பார்க் (Windsor Park) பகுதியில் இருக்கும் தரை வீட்டிலிருந்து 570,000 வெள்ளி மதிப்புமிக்க நகைகளைத் திருடிய சீன நாட்டவருக்கு ஐந்தரை ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

44 வயது லுவோ சாங்சாங் (Luo Changchang) சீனாவைச் சேர்ந்த திருட்டுக் கும்பல் ஒன்றின் உறுப்பினர் என்றும் வீடு புகுந்து திருடும் நோக்கத்துடன் சிங்கப்பூருக்கு வந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

திருட்டில் அவருக்கு உதவிய 39 வயதுச் சீன நாட்டவர் லோங் சீஹுவா (Long Zhihua) பிணையில் வெளிவந்த பிறகு தலைமறைவாகிவிட்டார். அவர் இன்னும் தேடப்பட்டுவருகிறார்.

லோங்கின் பிணைக்கு உதவிய இருவர்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு ஜூன் 21ஆம் தேதி மாலை 7:40 மணியளவில் விண்ட்சர் பார்க் பகுதியில் உள்ள வீடுகளை லுவோவும் லோங்கும் நோட்டமிடச் சென்றனர்.

அங்கிருந்த வீடு ஒன்றில் ஆளில்லாததை அறிந்து அத்துமீறி நுழைந்து 570,000 வெள்ளி மதிப்புமிக்க நகைகளைத் திருடினர்.

பிறகு இரவு 9:45 மணிவரை மற்ற வீடுகளில் திருட வாய்ப்புக் கிட்டுமா என்று நோட்டமிட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர்.

சுமார் 2 மணிநேரம் கழித்து வீடு திரும்பிய உரிமையாளர் நகைகளைக் காணவில்லை என்பது தெரிந்து காவல்துறைக்குத் தகவல் தந்தார்.

அப்பகுதியிலிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை வைத்துக் காவல்துறையினர் 26ஆம் தேதி லுவோவையும் லோங்கையும் கைது செய்தனர்.

இதுவரையில் 179,900 வெள்ளி மதிப்புமிக்க நகைகளை மட்டுமே இருவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வீடு புகுந்து திருடிய குற்றத்திற்காக லுவோவுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுச் சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
 
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்