Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உணவங்காடிகளில் தட்டுகள், கரண்டிகளை உரிய இடத்தில் திரும்பவைக்காதவர்களுக்கு எதிரான கடும் நடவடிக்கை - நாளை நடப்புக்கு வருகிறது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உணவங்காடிகளில் சாப்பிடுவோர் தட்டுகள், கரண்டிகளை அவற்றுக்குரிய இடத்தில் திரும்பவைப்பதை உறுதிசெய்வதற்கான அமலாக்க நடவடிக்கை நாளை முதல் (1 ஜூன்) கடுமையாக்கப்படுகிறது.

உணவங்காடிகள், காப்பிக் கடைகள், உணவு நிலையங்கள் முதலிய இடங்களில் சாப்பிட்ட பிறகு தட்டுகளையும் கரண்டிகளையும் திரும்பவைக்கத் தவறுவோரின் விவரங்களை நாளை முதல் அதிகாரிகள் கேட்டுப் பெறுவர்.

முதல்முறை விதியை மீறுவோருக்கு எச்சரிக்கைக் குறிப்புக் கொடுக்கப்படும். மீண்டும் அதே தவற்றைச் செய்தால் சம்பந்தப்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்படும். அல்லது அவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம்.

நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களையும் சமூகப் பொறுப்புணர்வையும் ஊக்குவிக்க அந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தேசியச் சுற்றுப்புற அமைப்பும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் உணவங்காடி மேசைகளில் குப்பைகளை விட்டுச் செல்வதற்கு எதிரான நடவடிக்கையை 2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தொடங்கின.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்