Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் உருவாகவிருக்கும் ஆக உயரமான கட்டடம்...

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் உருவாகவிருக்கும் ஆக உயரமான கட்டடம்...

(Perennial Holdings Private Limited)

சிங்கப்பூரில் 305 மீட்டர் உயரமுள்ள கட்டடம் ஒன்று உருவாகவிருக்கிறது.

2028-ஆம் ஆண்டுக்குள் அது கட்டிமுடிக்கப்பட்ட பின், சிங்கப்பூரின் ஆக உயரமான கட்டடமாக அது திகழும்.

284 மீட்டர் உயரம் கொண்ட Guoco Tower, சிங்கப்பூரின் தற்போதைய ஆக உயரமான கட்டடமாக உள்ளது.

அதனை விஞ்சும் புதிய கட்டடம் தஞ்சோங் பகாரில் 50 தளங்களைக் கொண்ட AXA Tower கட்டடம் தற்போது அமைந்துள்ள இடத்தில் வரவிருக்கிறது.

63 தளங்கள் கொண்ட புதிய கட்டடத்தை Alibaba நிறுவனமும் Perennial Holdings தலைமையிலான கூட்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கவிருக்கின்றன.

நகரச் சீரமைப்பு ஆணையம் ஒப்புதல் அளித்த திட்டங்களின்படி, புதிய கட்டடத்தில் சில்லறை வர்த்தகங்கள், உணவகங்கள், அலுவலகங்கள், ஹோட்டல், குடியிருப்புப் பகுதிகள் முதலியவை இருக்கும். 

கட்டடத்தின் பெரும்பகுதி வர்த்தகப் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa