Skip to main content
"என் படைப்புகளில் தமிழ் இருப்பதை விரும்புகிறேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"என் படைப்புகளில் தமிழ் இருப்பதை விரும்புகிறேன்" - விக்னேஸ்வரி வடிவழகன்

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் "தமிழ்ச்சுடர் 2025" நிகழ்ச்சியில் கலை விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார் திருமதி விக்னேஸ்வரி வடிவழகன்.

தமிழ் தமது கலைப்படைப்புகளில் இருப்பதை எப்போதும் விரும்புதாக அவர் கூறினார்.

கவிதைகளை அடிப்படையாக வைத்து நடனப் படைப்புகளை வழங்குதல், நடனத்தின் வாயிலாகத் திருக்குறளை மாணவர்களுக்குக் கற்பித்தல் என்று தமிழுக்கு முக்கியத்துவம் தரும் அர்ப்பணிப்பு மிகுந்த கலைஞர் அவர் என்றால் மிகையாகாது.

ஆங்கிலப் படைப்புகளைத் தமிழில் கர்நாடக சங்கீதத்திற்குக் கொண்டுவரும் ஆற்றல் படைத்த வெகுசிலரில் இவரும் ஒருவர்.

சிங்கே உட்பட தேசிய அளவில் பல நிகழ்ச்சிகளில் தமிழ்க்கலையின் பெருமையை மக்களிடம் கொண்டுசேர்த்த பெருமை அவரைச் சேரும்.

பாடகி, நடன ஆசிரியர், நடிகர், இசைக் கலைஞர், கலை நிகழ்ச்சிகளில் நடுவர், படைப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர்.

SIOC எனும் சிங்கப்பூர் இந்தியர் இசை, பாடகர் குழுவின் துணைத் தலைவராகவும் புத்தாக்க இயக்குநராகவும் இருக்கிறார்.

கலைகளின் வழி தமிழை வளர்க்கும் சிறந்த கலைஞராகத் திகழும் திருமதி விக்னேஸ்வரிக்குக் கலை விருது வழங்குவதில் பெருமைகொள்கிறது 'செய்தி'யின் தமிழ்ச்சுடர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்