Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"பாடத்தைத் தாண்டி தமிழை நேசிக்க கலைகளே சிறந்த வழி: 'செய்தி'யின் தமிழ்த்தோழர் விருது பெற்ற வடிவழகன்

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் "தமிழ்ச்சுடர் 2025" நிகழ்ச்சியில் திரு வடிவழகனுக்குத் தமிழ்த்தோழர் விருது வழங்கப்பட்டது .

தமிழ் ஆர்வத்திற்கு வித்திட்டவர் தமது தந்தை திரு பி.வி. சண்முகசுந்தரம் என்றார் திரு வடிவழகன்.

தமிழில் தொடர்ந்து தேர்ச்சி பெற முக்கிய பங்குவகித்த தமிழ் ஆசிரியர்களையும் அவர் நன்றியோடு நினைவுகூர்ந்தார்.

தமிழ் கலைப்படைப்புகளைச் செம்மையாகவும் வித்தியாசமாகவும் படைப்பதன் வழி மாணவர்களையும் இளையர்களையும் கவரமுடியும்; அவர்களுக்குத் தமிழ்மீதும் கலைமீதும் ஈடுபாடு உருவாக அது பெரிதும் உதவும் என்று அவர் சொன்னார்.

பள்ளியில் பாடமாகப் படிப்பதைத் தாண்டி, மாணவர்கள் தமிழை நேசிக்க மேடை நாடகம் போன்ற கலைகள் சிறந்த வழியாக உள்ளன என்றார் அவர். அதன் மூலம் தமிழை வாழும் மொழியாக நிலைத்திருக்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகச் சொன்னார், கலைச்செம்மல், கலைவாணர் போன்ற பல விருதுகளைப் பெற்ற திரு வடிவழகன்.

சமூகத்தில் தமிழுக்குத் தொண்டாற்றுவோருக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது 'செய்தி'யின் தமிழ்ச் சுடர் விருதுகள்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்