Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"மின் அகரம்" செயலியை உருவாக்கிய ஷாகுல் ஹமீதுக்குத் "தமிழ்ச்சுடர்" புத்தாக்க விருது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் தமிழுக்கான மின் அகராதியாய்த் திகழும் "மின் அகரம்" செயலியை உருவாக்கிய திரு ஷாகுல் ஹமீதுக்குத் "தமிழ்ச்சுடர் 2025" நிகழ்ச்சியில் புத்தாக்க விருது வழங்கப்பட்டது.

தமிழில் தெரியாத சொற்களுக்கு அகராதியில் பொருள் தேட மாணவர்களுக்கு அதிக நேரமாகிறது; அதைத் தவிர்க்கப் புதிய செயலியை உருவாக்கியதாகக் கூறினார் திரு ஷாகுல்.

மாணவர்களுக்கு உதவும் வண்ணம் சொற்களுக்கு உரிய படங்கள், அவற்றின் உச்சரிப்பைக் கற்றுக்கொள்வதற்கான ஒலிப்பதிவு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ள "மின் அகரம்" செயலியில் சுமார் 50,000 சொற்கள் உள்ளன.

சிங்கப்பூரில் உள்ள தமிழ்மொழி வல்லுநர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட அந்த மின் அகராதியில் உள்ளூரில் பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொற்களும் இடம்பெற்றுள்ளன என்றார் திரு ஷாகுல்.

பாலர்பள்ளி தொடங்கி எல்லா மாணவர்களுக்கும் தமிழ் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் பல செயலிகளை உருவாக்கத் திட்டம் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

தொழில்நுட்பத்தின் மூலம் சிங்கப்பூரில் தமிழை வாழும் மொழியாக நிலைத்திருக்கச் செய்வவோருக்குப் புத்தாக்க விருதினை வழங்கி வருகிறது 'செய்தி'யின் "தமிழ்ச்சுடர்" மேடை.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்