பனை ஓலைகளால் பின்னப்படும் எழில்மிகு பொருள்கள் (காணொளி)
வண்ண வண்ணப் பனை ஓலைகள்...பின்னலில் பிறக்கும் எழில்மிகு வீட்டுப் பொருள்கள்..
வண்ண வண்ணப் பனை ஓலைகள்...பின்னலில் பிறக்கும் எழில்மிகு வீட்டுப் பொருள்கள்..
சோழமண்டல வட்டாரத்தின் கைவினைக் கலைகளில் ஒன்றாகப் பின்னல் விளங்குகின்றது.
சத்தகத்தைப் பயன்படுத்தி கொட்டான் (கூடை) அழகாகப் பின்னப்படுகின்றது.
தானியங்கள், அரசி, பருப்பு போன்றவற்றைச் சேகரித்து வைக்க கொட்டான் (கூடை) பரவலாகக் கிராமங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு கூடையைப் பின்ன சுமார் 2 நாள் பிடிக்கும்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்று வரும் 'கலாசார விழா 2019'இன் ஓர் அங்கமாகக் 'கலா சங்கம்' கைவினைப் பட்டறையில் வருகையாளர்கள் கைவினைப் பொருள்களின் பின்னல் கலையைக் காணலாம்.
நாளைக் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அது இடம்பெறும்.
பின்னல் கலையின் நுணுக்கங்களை 'செய்தி'இடம் பகிர்ந்துகொண்டார் பின்னல் கலைஞர் திருமதி. முத்து ராஜேந்திரன்.