Skip to main content
தமிழ் மரபைக் கண்முன் கொண்டுவரும் கண்காட்சி (காணொளி)
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தமிழ் மரபைக் கண்முன் கொண்டுவரும் கண்காட்சி (காணொளி)

ஒரு சமூகம் தனது அடையாளத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள அதன் வேர்களைப் பற்றி அறிந்திருப்பது அவசியம். சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் 200 ஆண்டுகள் மேல் வாழ்த்து வருகின்றது.

வாசிப்புநேரம் -

ஒரு சமூகம் தனது அடையாளத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள அதன் வேர்களைப் பற்றி அறிந்திருப்பது அவசியம்.  சிங்கப்பூரில் தமிழ்ச் சமூகம் 200 ஆண்டுகள் மேல் வாழ்ந்து வருகின்றது.

"சோழமண்டலக் கரை முதல் மலாக்கா நீரிணை வரை: நம் தமிழ் மரபு குறித்த மறுபார்வை" என்னும் கண்காட்சியில் சிங்கப்பூருக்கும் தென்கிழக்காசியாவுக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் அனுபவங்கள் இடம்பெற்றுள்ளன.

இரண்டு பாகங்களாகக் கண்காட்சி பிரிக்கப்பட்டுள்ளது.

முதலாம் பாகத்தில் "பண்டைக்காலத் தென்கிழக்காசியாவில் தமிழர்கள்" பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூர்க் கற்பாகங்களின் முப்பரிமாண வடிவங்கள், ராஜராஜ சோழன் வெளியிட்ட சாசனம் பொறிக்கப்பட்ட செப்புத்தகடு போன்ற அரிய பொருள்கள் மின்னியல் முறையில் மறுவுருவாக்கப்பட்டு கண்காட்சியின் முதல் பாகத்தில் புது பரிணாமம் பெற்றுள்ளன.

இரண்டாம் பாகத்தில் "19ஆம் நூற்றூண்டு சிங்கப்பூரில் தமிழர்கள்" பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரின் ஆரம்பக்காலத் தமிழ் முன்னோடிகளின் படங்களை இந்தப் பாகத்தில் காணலாம்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் இந்தக் கண்காட்சி அடுத்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும்.

தமிழர்களின் மரபைக் கண்முன் கொண்டு வரும் கண்காட்சி....காணொளியின் மூலம்..


Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்