மாணவர்களின் பேச்சுத் திறனை வளர்க்க ஆண்டுக்கு ஆண்டுக்குப் புதிய யோசனை
(படம்: சவுரியம்மாள் ராயப்பன்)
This audio is generated by an AI tool.
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாடு செய்த சிறப்புப் பட்டிமன்றம் இனிதே நடைபெற்றது.
மாணவர்களின் பேச்சுத் திறனை வளர்த்து அதன்மூலம் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என்று கூறினார் நிகழ்ச்சி துணைத் தலைவர் முனைவர் சையது நிஸார்.
தமிழ் மீதான ஆர்வம் தமிழை நேசிப்பது, தமிழில் பேசுவதோடு நின்றுவிடக் கூடாது. தமிழை வாசிக்க வேண்டும். தமிழைப் பேச வேண்டும் என்று விரும்புவோர் தமிழை அதிகமாகப் படிக்க வேண்டும் என்று கூறினார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு த.ராஜசேகர்.
மார்ச் 14ஆம் தேதி பயிலரங்கம் நடத்தப்பட்டது.
மார்ச் 28ஆம் தேதி பட்டிமன்றப் போட்டி நடந்தது.
போட்டியில் வெற்றிபெற்றவர்கள் இன்றைய சிறப்புப் பட்டிமன்றத்தில் கலந்துகொண்டனர்.
உட்லண்ட்ஸ் நூலகத்தில் சிறப்புப் பட்டிமன்றம் மாலை 6 மணிக்குத் தொடங்கியது.
"நிறைவான வாழ்க்கைக்கு அவசியத் தேவை செயற்கை நுண்ணறிவா? இயற்கையோடு நூலறிவா?" என்பது இன்றைய பட்டிமன்றத்தின் தலைப்பு.
கலைஞர் திரு வடிவழகன் பட்டிமன்ற நடுவராக இருந்தார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.