Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பெண்ணே!: மற்றவர்களுக்காக வாழக்கூடாது -என்று கூறும் 51 வயதுப் பாதுகாவல் அதிகாரி #CelebratingSGWomen

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதில் முழு நம்பிக்கை வைத்து,அதன்படி வாழ்ந்தும் வருகிறார் 51 வயது தமிழ்ச் செல்வி. 

வாசிப்புநேரம் -

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதில் முழு நம்பிக்கை வைத்து,அதன்படி வாழ்ந்தும் வருகிறார் 51 வயது தமிழ்ச் செல்வி.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர், பாலர் பள்ளியில் ஆசிரியர், பாதுகாவல் அதிகாரி என வித்தியாசமான வேலைகளைக் குறையில்லாமல் செய்து பல பெண்களுக்கு ஊக்கமாக இருக்கிறார் இவர்.

இந்தச் சிங்கப்பெண்ணின் கதையைக் கேட்போமா?

சிங்கப்பெண்ணே!

பயந்த சுபாவம் கொண்டவராக இருந்த தமிழ்ச்செல்வி,
பல துன்பமான சூழல்களை சந்தித்துப், போராட்ட குணத்துடன் வெற்றி பெற்று வருகிறார்.

அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசித்தால் அப்போதே தோல்விதான் என்று தனக்கு தானே சொல்லிக் கொள்கிறார் இவர்.

சிறிய குடும்பம் பெரிய பொறுப்புகள்:

சிறிய குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் தமிழ்ச்செல்விக்குப் பொறுப்புகள் என்றுமே அதிகம் தான்.

உடன் பிறந்தவர்களின் நலனுக்காகப் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் வேலையில் சேர்ந்தார்.

பள்ளி பிடித்துப்போனதால், பள்ளியிலேயே வேலைக்குச் சேந்தார்.

எதிர்பாராத் திருப்பங்கள்:

22 வயதில் திருமணம். 23 வயதில் தாயானார்.

மகனைப் பார்த்துகொள்ள வேண்டியிருந்ததால், பிடித்த வேலையை விட வேண்டிய சூழ்நிலை.

படிக்கவும் வாய்ப்பில்லாமல் போனது.

படங்கள்: தமிழ்ச் செல்வி

மீண்டும் படிப்பு :

மகன் சற்று வளர்ந்தவுடன் 2005ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சுகாதாரப் பராமரிப்பு பட்டப் படிப்பில் சேர்ந்தார்.

அடுத்த ஆண்டு சுகாதாரப் பராமரிப்பு ஊழியராகப் பணியில் சேர்ந்தார்.

மீண்டும் வேலைக்குத் திரும்பியதில் தமிழ்ச் செல்விக்கு அளவில்லா ஆனந்தம்.

மணமுறிவு- சவால்கள்:

வேலைக்குச் சென்றது கணவருக்குப் பிடிக்கவில்லை. ஓராண்டிலேயே கைவிட வேண்டிய கட்டாயம்.

கருத்து வேறுபாடுகள் அடிக்கடி எழ, மணமுறிவு ஏற்பட்டது.

சேமிப்பு இல்லை, ஆதரவு இல்லை. ஆனால் தன்னம்பிக்கையுடன் 21 வயது மகனைக் கூட்டிக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறினார்.

வெற்றியே இலக்கு:

பாலர் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார்.

கல்வி முக்கியம் என்பதை எப்போதும் உணர்ந்ததால், நிதி நெருக்கடியிலும் மகனின் படிப்பிற்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தார்.

மகனுக்கு ஊக்கமாக இருந்து, அவரை அரசாங்க ஊழியராக்கினார்.

மனமே மந்திரம்:

COVID-19 காலக்கட்டத்தில் பெற்றோருக்கு உடல்நலம் குன்றவே, மீண்டும் வேலையைக் கைவிட்டார் தமிழ்ச் செல்வி.

அந்த நேரத்தில் வீட்டிலிருந்தபோது புதிய திறனைக் கற்றுக்கொள்ள ஆர்வம் பிறந்தது.

கணினியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டார்.

மீண்டும் வேலை:

குடும்பப் பொறுப்புகளின் அழுத்தம் குறைந்தாலும், வேலைக்குத் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பது தமிழ்ச்செல்வியின் ஆசை.

மீண்டும் வேலை தேடத் தொடங்கினார்.

கிருமிப்பரவல் காரணமாக வேலை கிடைப்பது சிரமமாக இருந்தது.

எந்த வேலைக்கும் தயார் என்று இருந்த தமிழ்ச்செல்வி, பாதுகாவல் அதிகாரியாக முடிவு செய்தார்.

இப்போது:

அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றிச் சிந்திக்கவே கூடாது. நேர்மையான வேலையா?- தயங்காமல் செய்யலாம் என்பதால் தான் பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்கிறேன்.

வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் மாறும். அதனால் "இதுவும் கடந்து போகும்" என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பது இந்த சிங்கப்பெண்ணின் வெற்றி மந்திரம். 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்