மீடியாகார்ப்பின் 'தமிழ்ச்சுடர்' விருது - 4ஆம் முறையாக இன்றிரவு
This audio is generated by an AI tool.
மீடியாகார்ப் நிறுவனமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'தமிழ்ச்சுடர்' விருது விழா இன்றிரவு நடைபெறவுள்ளது.
விழா 4ஆவது முறையாக நடத்தப்படுகிறது.
இதற்குமுன்னர் 2017, 2019, 2022 ஆகிய ஆண்டுகளில் தமிழ்ச் சுடர் விருது விழா நடத்தப்பட்டது.
சிங்கப்பூரில் தமிழ் வாழும் மொழியாக நீடித்து நிற்கவும் தழைத்தோங்கவும் பங்காற்றியோரைக் கௌரவிப்பது விழாவின் நோக்கம்.
இம்முறை விழாவில் 5 பிரிவுகளில் 6 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
அவை:
>> புத்தாக்க விருது
>> கலை விருது
>> தமிழ்த்தோழர் விருது
>> இளம் சாதனையாளர் விருது
>> வாழ்நாள் சாதனையாளர் விருது (2)
தமிழ்த்தோழர் என்பது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் விருது.
கலை, சமூகம், புத்தாக்கம் ஆகிய 3 பிரிவுகளில் விருது பெறத் தகுதி பெற்றவர்களை முன்மொழியும் வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அதற்கான விண்ணப் படிவங்கள் செய்தி இணையத்தளத்திலும் பகிரப்பட்டன.
அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோர் இன்று விருது பெறவிருக்கின்றனர்.
விருது நிகழ்ச்சி, விருது பெறுவோர் விவரங்களைத் தெரிந்துகொள்ள "செய்தி"யுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!