Skip to main content
"கதையின் தலைப்பு கவிதை போலிருக்கும்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"கதையின் தலைப்பு கவிதை போலிருக்கும்" - எழுத்தாளர் மா. இளங்கண்ணனுக்குத் 'தமிழ்ச்சுடர்' வாழ்நாள் சாதையாளர் விருது

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் "தமிழ்ச்சுடர் 2025" நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் திரு மா. இளங்கண்ணன்.

மாயாண்டி அம்பலம் பாலகிருஷ்ணன் எனும் இயற்பெயரைக் கொண்ட அவர் சாமானிய சிங்கப்பூரர்களின் கதைகளைத் தந்தவர்.

தமிழுக்காக இவர் ஆற்றிய பங்கைச் சக எழுத்தாளர்களில் சிலர் நினைவுகூர்ந்தனர்.

"புகழின் உச்சியில் மா. இளங்கண்ணன்....."

திரு மா. இளங்கண்ணன் மீது ரசிகர்கள் காட்டும் அன்பை வருணிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறுகிறார் எழுத்தாளர் இராம. கண்ணபிரான்.

"சில இளம் ரசிகர்கள் மா. இளங்கண்ணன் எனும் அவரின் பெயரைத் தங்களின் பிள்ளைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர்" என்றார் அவர்.

"அவர் எழுதிய "எண்ணங்கள் நிலையானவை அல்ல" எனும் சிறுகதை சிங்கப்பூர் இலக்கியத் களத்தின் சிறந்த சிறுகதை பரிசைப் பெற்றது. 'தூண்டில் மீன்' எனும் சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கியப் பரிசான 10,000 வெள்ளியைப் பெற்றது. இது அவரது புகழின் உச்சத்துக்கு உதாரணங்கள்"என்று திரு. கண்ணபிரான் சொன்னார்.

"எழுத்துகளில் தீவிரம் இருக்கும்......"

60களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கக்கூடிய படைப்புகளை மா. இளங்கண்ணன் கொடுத்திருக்கிறார்.

அவருடைய எழுத்துகள் சீர்த்திருத்தக் கருத்துகளை வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்கும் வகையில் தீவிரமானதாய் இருக்கும் என்கிறார் எழுத்தாளர் சித்ரா ரமேஷ்.

"அவரது கதைகளின் தலைப்புகள் கவிதைகள் போல் இருக்கும்" என்று திருவாட்டி சித்ரா கூறினார்.

சமூகத்தில் தமிழுக்குத் தொண்டாற்றுவோருக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது 'செய்தி'யின் தமிழ்ச்சுடர்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்