Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'தமிழில் யோசி' பயிலரங்கு - உற்சாகத்துடன் கலந்துகொண்ட இளையர்கள்

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் "தமிழில் யோசி" நிகழ்ச்சியின் பயிலரங்கு வெற்றிகரமாக நடந்தேறியது.

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்திருக்கும் "தமிழில் யோசி" நிகழ்ச்சியின் பயிலரங்கு வெற்றிகரமாக நடந்தேறியது.

100க்கும் மேற்பட்ட மாணவர்கள், பயிலரங்கில் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர்.

காலை 10 மணிக்குத் தொடங்கிய பயிலரங்கு 2 மணி நேரம் நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரிவின் தலைவராகப் பல்லாண்டு காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற திரு. பழனியப்பன் ஆறுமுகம், செய்தித்துறையில் பல ஆண்டு கால அனுபவம் கொண்ட திருமதி பவளகாந்தம் அழகர்சாமி ஆகியோர் பயிலரங்கை நடத்தினர்.

'தமிழில் யோசி' பயிலரங்கு ஒரு நல்ல ஏற்பாடு என்று திருமதி பவளகாந்தம் தெரிவித்தார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் தான் பிள்ளைகளின் ஆர்வம் எதில் உள்ளது என்பதைக் கண்டறிய முடியும். அதை வளர்க்க முடியும்.

பயிலரங்கில் இளையர்கள் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். நிறையக் கேள்விகளை ஆர்வத்துடன் கேட்டனர். கொடுக்கப்பட்ட பயிற்சிகளையும் சிறப்பாகச் செய்தனர்.

தமிழில் தயங்காமல் பேசுமாறு பயிலரங்கின்போது வலியுறுத்தியதாகத் திரு. பழனியப்பன் கூறினார்.

இது ஒரு நல்ல முயற்சி. மாணவர்கள், குறிப்பாக உயர்நிலைப் பள்ளிகளில் இருக்கக்கூடிய மாணவர்கள் பெரும்பாலும் தமிழில் பேசுவதற்குச் சிரமப்படுகின்றனர்.

ஆங்கிலத்தில் யோசித்து, தமிழில் மொழிபெயர்ப்பதற்குச் சிரமப்படுகிறார்கள். தவறு என்று நினைத்தாலும்கூட கவலைப்படாமல், வெட்கப்படாமல் முயற்சி செய்யுமாறு கூறினோம்.

என்றார் அவர்.

பயிலரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பயிலரங்கு மிகவும் சிறப்பாக இருந்தது. பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இதனால், தமிழை இன்னும் சுலபமாகக் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இன்னும் அதிகமாகவே பயன்படுத்துவேன்.

-இராமநாதன் இராகவ் சோலையப்பன்

தொடர்பு, தகவல் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் ஆதரவில் நடந்து வரும் 'தமிழில் யோசி' நிகழ்ச்சி நாளையும் தொடரும்.

பல விளையாட்டுகளும் போட்டியும் இளையர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பரிசுகளும் காத்திருக்கின்றன!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்