Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழுக்குச் சேவையாற்றுவோரை அங்கீகரிக்கும் 'தமிழ்ச்சுடர்' விருது 2025

வாசிப்புநேரம் -

மீடியாகார்ப் நிறுவனமும் தமிழ் மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழுவும் இணைந்து 'தமிழ்ச்சுடர்' விருதுக்கு மீண்டும் ஏற்பாடு செய்கின்றன.

சிங்கப்பூர்வாசிகளிடையே தமிழ் மொழி மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கப் பாடுபடுவோரை அடையாளங்கண்டு அங்கீகரிக்கின்றன 'தமிழ்ச்சுடர்' விருதுகள்.

நான்காம் முறையாக நடத்தப்படவிருக்கும் நிகழ்ச்சியில் 5 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். அவை:

- கலை 
- சமூகம்
- புத்தாக்கம்
- வாழ்நாள் சாதனையாளர் 
- இளஞ்சாதனையாளர் 

கலை, சமூகம், புத்தாக்கம் ஆகிய 3 பிரிவுகளில் விருது பெறத் தகுதியானவர்கள் என நீங்கள் கருதுவோரை இன்றிலிருந்து முன்மொழியலாம்.

விருதுகளுக்கு முன்மொழிவது பற்றிய கூடுதல் தகவல்களையும் விண்ணப்பப் படிவத்தையும் செய்தி இணையத்தளத்தில் பெறலாம். 

விருதுகளுக்கு முன்மொழிய இறுதி நாள், 15 பிப்ரவரி 2025.

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்