தெம்பனிஸில் 10 வாகனங்கள் மோதிக்கொண்டன
This audio is generated by an AI tool.
தெம்பனிஸ் விரைவுச்சாலையில் 10 வாகனங்கள் மோதிக்கொண்டன.
நேற்று (10 ஜனவரி) மாலை சுமார் 4.55 மணியளவில் செலத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் பகுதியில் விபத்து ஏற்பட்டது.
SGRV Facebook பக்கத்தில் பகிரப்பட்ட காணொளியில் சாலையின் ஒரு தடத்தில் 7 கார்கள் மோதிக்கொண்டதைப் பார்க்கமுடிகிறது.
சிறிய தூரத்தில் மேலும் 3 கார்கள் மோதிக்கொண்டதையும் காணமுடிகிறது.
இரண்டாம் தடத்தைத் தவிர்க்கும்படி நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று மாலை 5.02 மணியளவில் X தளத்தில் பதிவிட்டது.
விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.