Skip to main content
தெம்பனிஸில் தீச்சம்பவம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தெம்பனிஸில் தீச்சம்பவம்

வாசிப்புநேரம் -
தெம்பனிஸ் வட்டாரத்தில் சேமிப்புக் கிடங்கில் தீ மூண்டது.

சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

ஸ்ட்ரீட் 64இல் உள்ள புளோக் 665cஇல் நேற்று (12 மார்ச்) மாலை தீ மூண்டது.

சம்பவம் குறித்து தெம்பனிஸ் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோ போ கூன் Facebook பக்கத்தில் தகவல் தந்தார்.

"தற்காலிகச் சேமிப்புக்கிடங்கில் தீச்சம்பவம் நேர்ந்தது. எவரும் காயமடையவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் பேசினேன். அவர்கள் பாதுகாப்பாக இருப்பது நிம்மதியாக உள்ளது. சம்பவம் குறித்து சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை மேற்கொள்கிறது," என்றார் திரு கோ.

அத்துடன் தீச்சம்பவம் நேர்ந்தபோது, உதவிக்கரம் நீட்டிய முன்னாள் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி ரக்கினுக்கும் (Rakin) அங்குள்ள குடியிருப்பாளர் மிங் என்னுக்கும் (Ming En) திரு கோ நன்றி சொன்னார்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்