Skip to main content
தெம்பனிஸில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தெம்பனிஸில் தீ - அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர் மருத்துவமனையில்

வாசிப்புநேரம் -
தெம்பனிஸில் தீ - அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர் மருத்துவமனையில்
படம்: Facebook/சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை
வெளியீடு : 10 Jan 2026 03:08PM புதுப்பிப்பு : 10 Jan 2026 05:10PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தெம்பனிஸ் கூட்டுரிமை வீட்டில் மூண்ட தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நேற்று தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 86, புளாக் 29இல் தீ மூண்டது.

அது குறித்து இரவு 9.05 மணியளவில் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது 15ஆம் மாடி வீட்டின் அறையில் தீ மூண்டதாகத் தெரியவந்தது.

தீ அறையைத்தாண்டி வெளியில் பரவவில்லை.

முன்னெச்சரிக்கையாகச் சுமார் 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் இரண்டு தண்ணீர்க் குழாய்களைக்கொண்டு தீயை அணைத்தனர்.

தீ மூண்டதன் பின்னணி விசாரிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

தீச்சம்பவங்களைத் தவிர்க்கப் பொதுமக்கள் பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று அதிகாரிகள் நினைவூட்டினர்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்