Skip to main content
தெம்பனிஸ் தீ கட்டுக்குள் வந்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

தெம்பனிஸ் தீ கட்டுக்குள் வந்தது- வட்டாரத்தில் நடமாட்டத்துக்கு அனுமதியில்லை

வாசிப்புநேரம் -
தெம்பனிஸ் தொழில்துறைக் கட்டடத்தில் மூண்ட தீ முற்றாக அணைக்கப்பட்டுவிட்டது.

ஆனால் அந்த வட்டாரத்தைச் சுற்றி நடமாட்டத்துக்கு அனுமதி இல்லை.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் குறைந்தது 7 வாகனங்களும் ஒரு காவல்துறை வாகனமும் அங்கு இன்னமும் நிறுத்தப்பட்டிருப்பதை "செய்தி" கண்டது.

அங்குள்ள TC Homeplus நிறுவனத்தில் தீப்பற்றியதாகச் சொல்லப்பட்டது.

அங்கிருந்த ஊழியர்களும் அருகில் உள்ள பள்ளியின் மாணவர்களும் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீ கட்டடத்தின் பெரும்பகுதிக்குப் பரவியதாகவும் அடர்த்தியான கரும்புகை அச்சமூட்டியதாகவும் 'செய்தி'யிடம் பேசிய ஊழியர்கள் கூறினர்.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சும் அளவுக்குத் தீ மோசமாக இருந்ததாய்ச் சிலர் தெரிவித்தனர்.

சம்பவ இடம் SAFRA தெம்பனிஸுக்கு அருகே உள்ளது.

கட்டடம் முழுமையாகச் சாம்பலால் மூடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்