Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்த பெண்கள் - ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த முதல் பெண் டாங் புவி வா #CelebratingSGWomen

விளையாட்டுப் போட்டிகள் என்றாலே பல பெண்கள் தயங்கி, தவிர்க்கும் காலக்கட்டத்தில், பெண்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்தவர் டாங் புவி வா (Tang Pui Wah).

வாசிப்புநேரம் -

விளையாட்டுப் போட்டிகள் என்றாலே பல பெண்கள் தயங்கி, தவிர்க்கும் காலக்கட்டத்தில், பெண்கள் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்தவர் டாங் புவி வா (Tang Pui Wah).

1950களில், அவர் சிங்கப்பூரிலும் மலேயாவிலும் புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்ந்தவர்.

தடையோட்டம், ஓட்டப்பந்தயம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய அவர் ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த முதல் பெண்மணி.

1952இல் நடைபெற்ற ஹெல்சிங்கி (Helsinki) ஒலிம்பிக் விளையாட்டுகளில் 80 மீட்டர் தடையோட்டத்திலும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் பங்கெடுத்தார் அவர்.

அப்போது அவருக்கு வயது 19.

'ஹெல்சிங்கி பெண்' என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவர் சிங்கப்பூரின் பெண் விளையாட்டாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

நன்யாங் பெண்கள் பள்ளிக்குச் சென்றபோது, விளையாட்டில் அவரின் ஈடுபாடு அதிகரித்தது.

பள்ளியில், சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்கள் அவரிடம் இயற்கையாக இருந்த திறமையை வளர்த்தனர்.

1949இல் 15 வயதான டாங், சீனாவின் 100 மீட்டர் ஒலிம்பிக் சாதனையை முறியடித்தார்.

1954இல், ஆசிய விளையாட்டுகளில் 80 மீட்டர் தடையோட்டத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

1955இல், தமது 22ஆவது வயதில், டாங் விளையாட்டுகளிலிருந்து ஓய்வுபெற்றார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்