தஞ்சோங் காத்தோங் ரோட்டில் திடீர்ப் பள்ளம் - 2 தண்ணீர்க் குழாய்கள் சேதம்
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தஞ்சோங் காத்தோங் ரோட்டில் இன்று (26 ஜூலை) திடீர்ப் பள்ளம் ஏற்பட்டபோது முக்கியமாகப் பயன்படுத்தப்படும் 2 தண்ணீர்க் குழாய்கள் சேதமடைந்தன.
தேசியத் தண்ணீர் அமைப்பான PUB Facebook தளத்தில் அதனைப் பதிவிட்டது.
தஞ்சோங் காத்தோங் ரோட்டுக்கும் மவுண்ட்பேட்டன் ரோட்டுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் இன்று(26 ஜூலை) மாலை சுமார் 5 மணியளவில் திடீர்ப் பள்ளம் ஏற்பட்டது.
அப்போது ஒரு கார் பள்ளத்தில் விழுந்தது.
காரை ஓட்டிய பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாலையின் 2 தடங்கள் மூடப்பட்டுள்ளன.
தற்போது காவல்துறையினர், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர், நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் ஆகியோர் நிலைமையைக் கையாள்வதாக PUB சொன்னது.

தொடர்புடையவை:
ஆதாரம் : CNA