டிரம்ப்பின் வரி - வட்டார நாடுகளுடன் இணைந்து செயல்பட விரும்பும் உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்கள்
வாசிப்புநேரம் -

படம்: envato.com
உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்கள் வட்டார நாடுகளுடன் பங்காளித்துவத்தை வலுப்படுத்த எண்ணுகின்றனர்.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு அமெரிக்கா 100 விழுக்காட்டு வரி விதித்ததையடுத்து அந்த முயற்சி.
வரி குறித்த தெளிவான விவரங்கள் இல்லை.
எனினும் திரைப்படங்களைத் தயாரிக்கவும் விநியோகிக்கவும் உலக அளவில் தொடர்புகளை மேம்படுத்துவது அவசியம் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
A Useful Ghost எனும் திரைப்படம் சிங்கப்பூர், தாய்லந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பில் உருவானது.
உலகின் ஆகச்சிறந்த திரைப்படங்களுக்கான கான் (Cannes) விழாவில் இந்தத் திரைப்படம் இடம்பெறவிருக்கிறது.
அமெரிக்கா தன்னைப்பேணித்தனமாய் நடந்துகொள்ளும் இந்த நேரத்தில் இத்தகைய அனைத்துலக ஒத்துழைப்பு அதிமுக்கியம் என்று படத்தின் இணைத் தயாரிப்பாளர் கூறுகிறார்.
திரைப்படத் துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவுசெய்ய ஒன்றாகப் பணியாற்றும் என்று இந்த சிங்கப்பூர் தயாரிப்பாளர் எதிர்பார்க்கிறார்.
அமெரிக்கா விதித்துள்ள வரி என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிய சில காலம் ஆகலாம்.
உள்ளூர் திரைப்படத் துறை தழைத்தோங்க அனைத்துலகக் கூட்டு முயற்சிகளே கைகொடுக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : Others