Skip to main content
மாது பலியான பாசிர் ரிஸ் விபத்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

மாது பலியான பாசிர் ரிஸ் விபத்து - டாக்சி ஓட்டுநருக்குச் சிறை

வாசிப்புநேரம் -
பாசிர் ரிஸில் 2023ஆம் ஆண்டு நடந்த விபத்தின் தொடர்பில் டாக்சி ஓட்டுநர் இங் இயன் ஹுவாட்டிற்கு (Ng Ian Huat) ஐந்தரை மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அவர் 76 வயது அங் மியே ஜென் (Ang Mie Jen) சாலையைக் கடப்பதைக் கவனிக்காமல் டாக்சியைச் செலுத்தியதில் விபத்து நேர்ந்தது.

இங் கவனக்குறைவுடன் டாக்சியை ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவர் 8 ஆண்டுகளுக்கு வாகனத்தை ஒட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அதுவே குறைந்தபட்ச தண்டனை.

சம்பவம் நடந்தபோது டாக்சியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவான காணொளி இன்று நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்