அதிகாரியின் கையை முறித்த டாக்சி ஓட்டுநருக்குச் சிறைத் தண்டனை
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியின் கையை முறித்த டாக்சி ஓட்டுநருக்குச் சிறைத்தண்டனையும் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் 2022 அக்டோபர் மாதம் ஃபேரர் ரோடு (Farrer Road) அருகே நடந்தது.
குற்றம் புரிந்த ஜெரேமியா ஓங் செங் ஹ்வீ (Jeremiah Ong Seng Hwee) என்பவருக்கு வயது 72.
அவர் கைத்தொலைபேசியைப் பயன்படுத்திக்கொண்டே டாக்சி ஓட்டியதை அதிகாரி கவனித்தார்.
அதிகாரி டாக்சியை நிறுத்தினார். ஓங் உரிய ஆவணங்களை வழங்க மறுத்தார்.
டாக்சி இயங்குவதை நிறுத்த அதிகாரி கண்ணாடிக்குள் கையை நீட்டியபோது ஓட்டுநர் கண்ணாடியை ஏற்றினார்.
பின்னர் டாக்சியை முன்னே செலுத்தினார்.
அதிகாரியின் கையில் எலும்பு முறிந்தது.
ஓங்கிற்கு 7 நாள் சிறைத்தண்டனை; வாகனம் ஓட்ட 8 மாதத் தடை ஆகியவை விதிக்கப்பட்டன.
அதிகாரியின் மருத்துவச் செலவை ஈடுகட்ட ஓங் 128 வெள்ளி இழப்பீடு வழங்கினார்.

ஆதாரம் : CNA